IPL 2018:கொல்கத்தா அணியின் சிறந்த கேப்டன் யார்?தினேஷ் கார்த்திக்கா ?கம்பீரா?நறுக்குன்னு பதில் சொன்ன உத்தப்பா

Default Image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ராபின் உத்தப்பா ,கிரிக்கெட் ஆட்டம் சட்டக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது, இது பவர் கேமாக மாறியுள்ளது, எந்த ஒரு இலக்காக இருந்தாலும் வெற்றிகரமாக விரட்டி விடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

“ஆட்டத்தின் இயக்கத்திலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது மாறிவரும் ஒரு விளையாட்டு, எந்த இலகாக இருந்தலும் விரட்டி விடலாம் போல் உள்ளது. கிரிக்கெட் ஒரு பவர் கேமாக மாறிக் கொண்டிருக்கிரது, இப்போது இலக்கை விரட்டுவதுதான் ஃபேஷன், ஆட்டத்தில் சட்டக மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதலிடத்துக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை ஆடுகிறோம். சரியான நேரத்தில் உச்சத்துக்குச் செல்வது முக்கியம்.

இந்த ஐபிஎல் தொடர் இரண்டு பாதிகளையுடைய தொடராகும். தொடக்கத்தில் பிளே ஆஃபுக்கு தகுதி பெறப் பார்ப்போம்., ஏனெனில் உத்வேகம் தேவைப்படுகிறது. 6 ஆட்டங்களுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு இடைவெளி கிடைக்கும் எனவே இப்போது அணி உள்ள நிலைமை மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆட்டமுமே எங்களுக்கு முக்கியம்தான்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. ஆனால் எப்போதும் பந்துகளை நன்றாக அடிப்பதாகவே உணர்கிறேன். இப்போதும் அப்படித்தான் உணர்கிறேன், இன்னும் மேன் மேலும் சிறப்பாக ஆட வேண்டும்.

நிதிஷ் ராணா ஒரு அருமையான பேட்ஸ்மென், முதிர்ச்சியும் பொறுப்பும் உள்ளது, பேட்டிங் ஆர்டரை நாங்கள் பெரிய அளவில் மாற்றவில்லை. டாப் 3 எப்போதும் அதேதான். சிலவேளைகளில் புதிதாக முயற்சிப்போம் ஆனால் மீண்டும் அதே டாப் ஆர்டருக்குத் திரும்பி விடுவோம்.

சுனில் நரைன், லின் டாப் ஆர்டரில் கிளிக் ஆகிவிட்டால் ராணா, நான், தினேஷ், ரசல் ஆகியோருக்கு சுலபம்.கம்பீர் ஒரு ஆளுமை தினேஷ் கார்த்திக் வேறொரு ஆளுமை. கார்த்திக் கொஞ்சம் ஓர்மையுடையவர், நிறைய சிந்திப்பவர், வீரர்கள் தங்கள் உள்ளுணர்வுடன் ஆட சுதந்திரம் அளிப்பவர், கம்பீர் கொஞ்சம் தானாகவே முன்வந்து சில விஷயங்களை பரிந்துரைப்பவர் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ராபின் உத்தப்பா கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்