ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 200 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா(59), ரஸ்ஸல் (41),உத்தப்பா (35),லின் (31),கேப்டன் கார்த்திக் (19) ரன்களும் அடித்தனர்.
டெல்லி அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட்,மோரிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைபற்றினார்.கடைசி ஓவரில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர் திவாட்டியா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகள் சரிந்தது.அந்த அணியில் அதிக பட்சமாக மேக்ஸ்வெல்(47),பண்ட்(43) ரன்கள் அடித்தனர்.14.2 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா பந்துவீச்சில் சுனில் நரைன் ,குல்தீப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது, “கொல்கத்தா அணியினர் மிகச்சிறப்பாக விளையாடினர், இந்த வெற்றிக்கு அவர்கள் நிச்சயம் தகுதியானவர்களே. கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர்கள் 170ல் இருந்து 175 ரன்கள் கூட எடுக்க மாட்டார்கள் என்ற ஒரு கட்டத்தில் நினைத்தேன், ஆனால் அவர்கள் 200 ரன்களை அடைந்துவிட்டனர். கொல்கத்தா அணிக்கு எதிராக 200 ரன்களை எட்டுவது மிக கடினம் என்பது எனக்கு முன்பே தெரியும், அவர்களிடம் மிகச்சிறந்த மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், இருந்த போதிலும் எங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே விளையாடினோம். ஆண்ட்ரியூ ரசல் போன்ற வீரர்களை முடிந்தவரையில் விரைவாக அவுட்டாக்கி விட வேண்டும், நாங்கள் அதனை செய்ய தவறிவிட்டோம். இந்த போட்டிக்காக நிறைய திட்டங்களை வகுத்து வைத்திருந்தோம் ஆனால் அதனை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. இந்த தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் நிச்சயம் மீண்டு வருவோம். பெங்களூர் அணியுடனான அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…