ஐபிஎல் 2018 தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது.பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக லின் (74),தினேஷ் கார்த்திக்(43),உத்தப்பா (34) ரன்கள் அடித்தனர்.
பஞ்சாப் பந்துவீச்சில் பரிந்தர் சரன்,டை தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.பின்னர் பஞ்சாப் அணி 192 ரன்கள் இலக்குடன் ஆடியது.ஆட்டத்தின் போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப் அணி 96 ரன்கள் அடித்தது.பின்னர் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டு 125 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.பின்னர் 11.1 ஓவர்களில் 126 எடுத்து பஞ்சாப் அணி அபார வெற்றி.இதனால் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் (60)ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் கெயில் (49),அகர்வால் ரன்கள் அடித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கே.எல் ராகுல் பேசியதாவது, “கெய்ல் அதிரடியாக விளையாடுவதற்காக நான் நிதானமாக விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர் ஒரு ஓவரை அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த ஓவரை அவருக்கே விட்டு விடுவேன். அதே போல் இன்றைய(நேற்று) போட்டியில் நான் சிறப்பாக விளையாடினேன் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…