IPL 2018:கூலாக சாதனைகளை பறக்க விட்ட தல!பாக்.வீரர் சாதனை தகர்ப்பு!

Default Image

9-வது முறையாக  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் டி20 போட்டியில் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று வெற்றிக் கேப்டனாக வலம் வரும் எம்எஸ் தோனி, அடுத்தடுத்து டி20 போட்டிகளில் பல சாதனைகளைச் செய்துள்ளார்.

ஐபிஎல் டி20 போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 11 ஐபிஎல் சீசனில் 2 ஆண்டுகளில் மட்டும் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவில்லை. மற்ற 9 ஐபிஎல் சீசனிலும் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அணியை தகுதி பெறச்செய்து வெற்றிக் கேப்டனாகவும், கேப்டன் கூலாகவும் தோனி திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகள் தடைக்குப்பின் 11-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழுபலத்துடன் விளையாடி வருகிறது. புனேயில் நேற்று நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, 9-வது முறையாக ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் தோனி 3 கேட்சுகளைப் பிடித்து பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

அதிகமான கேட்சுகள்:

அதுமட்டுமல்லாமல், டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் அதிகமான கேட்சுகளை பிடித்த வீரர் எனும் பெருமையையும் தோனி நேற்று பெற்றார்.

Image result for SANGAKKARA ipl

இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார சங்கக்கரா 142 கேட்சுகளை பிடித்ததே டி20 போட்டிகளில் சாதனையாக இருந்தது.

ஆனால், நேற்றேய போட்டியில் தோனி 3 கேட்சுகளைப் பிடித்ததன் மூலம், டி20 போட்டியில் 144 கேட்சுகளைப் பிடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தச் சாதனையை தோனி தனது 291-வது டி20 போட்டியில் செய்துள்ளார். ஆனால், சங்கக்கரா தனது 264 போட்டிகளில் 142 கேட்சுகளை பிடித்துள்ளார்.

மற்ற வீரர்கள்

இவர்கள் இருவரையும் தவிர்த்து, தினேஷ் கார்த்திக் 247 போட்டிகளில் பங்கேற்று 139 கேட்சுகளுடன் 3-ம் இடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் 123 கேட்சுகளுடன் 4-வது இடத்திலும், மேற்கிந்தியத்தீவுகள் வீரர் தினேஷ் ராம்தின் 111 கேட்சுகளுடன் 5-ம் இடத்திலும், நமன் ஓஜா 106 கேட்சுகளுடன் உள்ளனர்.

பாக். வீரரை முந்தினார்:

 Image result for KAMRAN AKMAL KEEPING 2018 IPLமேலும் டி20 போட்டிகளில் அதிகமான டிஸ்மிஸல் செய்ததிலும் தோனி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் 215 டிஸ்மிஸல் செய்து முதலிடத்தில் இருந்தார். ஆனால், தோனி 216 டிஸ்மிஸல் செய்து கம்ரான் அக்மல் சாதனையை முறியடித்தார்.

இவர்கள் இருவரைத் தவிர இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்கரா 202 டிஸ்மிஸல்களையும், தினேஷ் கார்த்திக் 192 டிஸ்மிஸல்களையும், மேற்கிந்தியத்தீவுகள் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 155 டிஸ்மிஸல்களையும் செய்தனர். இந்திய விக்கெட் கீப்பர் நமன் ஓஜா 130 டிஸ்மிஸல்கள், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பில் மஸ்டர்ட் 130 டிஸ்மிஸல்களையும் செய்துள்ளனர்.

7-வது பேட்ஸ்மேன் தோனி:

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோனி 7 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 7-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன் விராட் கோலி 4,948 ரன்கள், சுரேஷ் ரெய்னா 4,931 ரன்கள், ரோகித் சர்மா(4,493), கவுதம் கம்பீர்(4,217), ராபின் உத்தப்பா(4,081), டேவிட் வார்னர்(4,014) ஆகியோர் இந்தச் சாதனையை செய்துள்ளனர்.

நடுவரிசை பேட்ஸ்மேன்:

ஆனால், இந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதனால் எளிதாக ரன்கல் குவிக்க அவர்களால் முடியும். ஆனால், நடுவரிசையில் இறங்கி 4 ஆயிரம் ரன்களைக் தோனி குவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்து வரும் 11-வது ஐபிஎல் சீசனிலும் தோனி 14 போட்டிகளில் 446 ரன்கள் சேர்த்து சராசரியாக 89.20 ரன்களுடன் உள்ளார். இதில் 30 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகள் அடங்கும். இந்தத் தொடரில் அதிகமான சிக்ஸர் அடித்த வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தில் தோனி உள்ளார்.

5 ஆயிரம் ரன்கள்:

Image result for virat 2018 ipl

 முன்னதாக, டி20 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையையும் தோனி பெற்றிருந்தார். கடந்த மாதம் 25-ம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக்காரணமாக இருந்தார். அப்போதுதான் இந்த மைல்கல்லை எட்டினார்.

டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களில் தோனிக்கு (6,023 ரன்கள்) அடுத்த இடத்தில் கவுதம் கம்பீர்(4242ரன்கள்), விராட் கோலி(3,872ரன்கள்) உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்