IPL 2018:கிறிஸ் கெயில்ல ரொம்ப ஈசியா தூக்கலாம்னு நினைச்சோம்,ஆனா கைமீறி போச்சு!தோனி உண்மையிலே சேஸ் மாஸ்டர் தான்!பிளெமிங்

Default Image

“சேஸிங்கின் போது எங்களது தடுமாற்றம், கெயில் பேட்டிங்கின் போது நாங்கள் தடுமாறியது போலவே துவக்கம் அமைந்தது. இருப்பினும் தோனி அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு மிக அருகில் எடுத்துக் சென்றார் என்று பிளெமிங் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் கடந்த 15 ஆம் தேதி  நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்களைக் குவித்தார்.

Related image

தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனி,இலக்கை அடையும் நோக்கில் ரன்களை விரைந்து சேர்த்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில் தோனியின் பேட்டிங்கை கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகின்றது.தோல்வி அடைந்தாலும்,அவரின் பேட்டிங் திறனை குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Image result for chennai super kings vs punjab 2018

போட்டி முடிந்தவுடன் பேசிய சென்னை அணி பயிற்சியாளர் பிளெமிங் கூறுகையில்,  கெயில் மிகவும் அதிரடியாக விளையாடினார், நாங்கள் அவரை அவரது அதிரடி ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவுட் ஆக்கிவிடலாம் என்று நினைத்தோம், இருப்பினும் 200 ரன்களுக்குள் அவர்களை கட்டுபடுத்தினோம், இரண்டாம் பாதியில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, ஆனாலும் 196 ரன்கள் என்பதும் பெரிய இலக்கே, இதை விட அதிக ரன்கள் அவர்கள் குவித்திருக்கக் கூடும் அந்த நிலையில் இருந்து அவர்களை கட்டுபடுத்தியது சிறந்த விஷயம்” என்று கூறினார்.சி.எஸ்.கே.வின் துவக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்து அந்த அணி 7 ஒவர்களில் 56/3 என்ற நிலையில் இருந்ததது. அப்போது ஜோடி சேர்ந்த ராயுடு மற்றும் தோனி 57 ரன்களை 4வது விக்கெட்டுக்கு சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். பின்னர் வந்த ஜடேஜாவுடனும் தோனி ஜோடி சேர்ந்து 50 ரன்கள் எடுத்தார்.

“சேஸிங்கின் போது எங்களது தடுமாற்றம், கெயில் பேட்டிங்கின் போது நாங்கள் தடுமாறியது போலவே துவக்கம் அமைந்தது. இருப்பினும் தோனி அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு மிக அருகில் எடுத்துக் சென்றார். மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் கெயில் மற்றும் தோனி ஆகிய இரு சீனியர் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.” என்றும் பிளெமிங் தெரிவித்தார்.

ஆட்டத்தின் போது தோனியின் முதுகு பகுதியின் பிரச்சினையின் காரணமாக அவர் அவதிப்பட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து விளையாடி 34 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க முடியாமல் போனதிற்கு மோஹிட் ஷர்மாவின் அந்த இரண்டு ஒய்ட் யார்க்கர் காரணமாக அமைந்தது. அது பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

Image result for chennai super kings vs punjab 2018

“சேஸிங்கின் போது கடின சூழ்நிலையில் விளையாடும்போது, நாம் அதில் எடுக்கும் கடின முயற்சிகளை சிறப்பான முறையில் கையாள தெரிந்திருக்க வேண்டும், அதை தோனி மிகக் சிறப்பாக செய்தார். மோஹிட் ஷர்மாவின் அந்த அருமையான இரண்டு யார்க்கர்கள் எங்களின் வெற்றியைத் தடுத்துவிட்டது. சி.எஸ்.கே. வின் செயல்பாடுகள் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தாலும், எங்களை மெருகேற்றி கொள்ள வேண்டிய இடங்களும் உள்ளன.” என்றார்.

ஒரு அணியை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அதை சேஸ் செய்வதையே விரும்புகிறேன். ஆனால் போட்டி என்பது இருப்பக்கமும் சார்ந்தது. துவக்க விக்கெட்டுகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் அதன் முக்கியத்துவத்தை பார்த்திருக்கிறோம் . நாம் சரியான விகிதத்தில் வீரர்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அதில் நாங்கள் மிக தொலைவில் இல்லை. எங்கள் தவறுகள் மேம்படுத்தக் கூடியவையே. சி.எஸ்.கே. அணிக்கு அதன் ஹோம் கிரவுண்ட் தொடர்பான சில பிரச்சினைகள், மற்றும் எங்களின் சில வீரர்கள் காயமடைந்த போதிலும், மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளோம்.” என்றும் பிளெமிங் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala