IPL 2018:கிறிஸ் கெயிலை சமாளிக்குமா கொல்கத்தா?வெற்றி வாய்ப்பு யாருக்கு ?கொல்கத்தா -பஞ்சாப் இன்று மோதல் !
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மோதுகின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன..? இரு அணியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ள அணி எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 190+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முழு பலம் கொண்ட அணியாகவே உள்ளது. பேட்டிங்கில் கிறிஸ் லின், ரசல், ராணா என போட்டி போட்டு எதிரணிகளுக்கு பயம் காட்டி வரும் நிலையில், மறுபுறம் நரைன், சாவ்லா மற்றும் குல்தீப் யாதவ் தங்களது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக விளங்கி வருகின்றனர்.
அதே போல் வேகப்பந்து வீச்சில் டாம் குர்ரான், மற்றும் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்து வருகின்றனர்.
பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
சரியான விக்கெட் கீப்பர் இல்லை என்பதை தவிர பஞ்சாப் அணியில் குறை சொல்வதற்கு வேறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. கெய்ல், ஆரோன் பின்ச், மில்லர் என அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன பல வீரர்களை தனது அணியில் வைத்துள்ள பஞ்சாப் அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் பஞ்சாப் அணி அஸ்வின், முஜிபுர் ரஹ்மான் என முழு பலம் கொண்ட அணியாகவே திகழ்ந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.