IPL 2018:கண்டிப்பா இஷான் அடுத்த போட்டியில் விளையாடுவார்!இன்னும் நான்கு நாட்கள் உள்ளது !ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் அடுத்த போட்டியிலேயே நிச்சயம் அணிக்கு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது.
வலி தாங்காமல் மைதானத்தில் நிலைகுலைந்தார் இஷான் கிஷன்.அதாவது பும்ரா வீசிய பந்தை விராட் கோலி தரையோடு தரையாக புல் ஷாட் ஆடினார். பந்து மிட்விக்கெட் பீல்டர் முன்னால் விழுந்தது ஹர்திக் பாண்டியா அடித்த த்ரோ பிட்சில் பட்டு இஷான் கிஷன் வலது கண் அருகில் பயங்கரமாகத் தாக்க அவர் கீழே விழுந்து வலியால் துடித்தார்.
வலது கண் வீங்கிய நிலையில் மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி அளித்து பெவிலியன் அழைத்துச் சென்றனர், இதனையடுத்து ஆதித்யா தாரே விக்கெட் கீப்பிங் செய்தார்.
பந்து கொஞ்சம் மேலே கண்களைத் தாக்கியிருந்தால் ஒருமுறை தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இவருக்கு ஏற்பட்டிருக்கலாம், எப்படியோ தப்பினார், ஆனாலும் அவரது காயத்தின் தீவிரம் குறிந்து சந்தேகம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் அடுத்த போட்டியிலேயே நிச்சயம் அணிக்கு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது, “இஷான் கிஷான் அடுத்த போட்டியிலேயே விளையாடுவார், நாங்கள் அடுத்த போட்டியில் பங்கேற்க இன்னும் நான்கு தினங்கள் உள்ளதால் அது இஷான் கிஷான் குணமடைய போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறேன், அவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.