IPL 2018:கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ! சியர் கேர்ள்ஸ்களுடன் பார்டிக்கு சென்று சர்சையை ஏற்படுத்திய டிடி அணியினர்!
பிசிசிஐ,ஐபிஎல் போட்டியில் சியர் கேர்ள்ஸ்களுடன் விருந்தில் கலந்து கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
11-வது ஐபிஎல் சீசனில் இடம் பெற்றிருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதிபெறாமல் வெளியேறியது. அதேசமயம், கேப்டன் பொறுப்பு கம்பீரிடம் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் கைகளுக்கு மாறியபின் அணியின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது.
இதன் காரணமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டபோதிலும், சிஎஸ்கே, மும்பைஇந்தியன்ஸ் ஆகிய அணிகளுடனான கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் டெல்லி அணி அபாரமான வெற்றியைப் பெற்றது.
இதில் டெல்லியில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி நடப்பதற்கு முன் குருகிராமில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சியர் கேர்ஸ்(நடன மங்கைகள்) உடன் விருந்துக்கு அணி நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.
ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு சூதாட்டச் சர்ச்சையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் சிக்கி தண்டனைப் பெற்றபின், ஐபிஎல் அணிகள் நடத்தும் விருந்துகளில் வெளி ஆட்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது, சியர் கேர்ள்ஸ் வரக்கூடாது என்று ஐபிஎல் நிர்வாகம் கண்டிப்புடன்தெரிவித்து இருந்தது.
இந்த விதிமுறையை மீறி, குருகிராமில் உள்ள நட்சத்திர விடுதியில் சியர் கேர்ள்ஸுடன் டெல்லி அணியினர் விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் பிசிசிஐ அமைப்பின் ஊழல்தடுப்புபிரிவு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘குருகிராமில் ஒரு நட்சத்திரவிடுதியில் சியர் கேர்ள்ஸுடன் விருந்தில் டெல்லி அணியினர் கலந்து கொண்டது உண்மைதான். சியர் லீடர்ஸ் வந்தார்கள், விருந்தில் பங்கேற்று, சாப்பிட்டு முடித்தவுடன் சென்றுவிட்டார்கள்’ எனத் தெரிவித்தனர்.
இது குறித்து பிசிசிஐஅமைப்பின் ஊழலுக்கு எதிரான பிரிவு எந்தவிதமான புகாரும் பிசிசிஐ அமைப்பிடம்முறைப்படி அளிக்கவில்லை. அதேசமயம், டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்தைக் கடுமையாகஎச்சரித்து இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது உத்தரவிட்டுள்ளனர்.
பிசிசிஐயின் ஊழலுக்கு எதிரானபிரிவினர் தரப்பில் கூறுகையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர், நிர்வாகத்தின் சியர் கேர்ல்ஸுடன் விருந்தில் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால், ஐபிஎல்விதிப்படியும், பிசிசிஐ உத்தரவுப்படியும் விருந்தில் வெளிஆட்கள் பங்கேற்கக்கூடாது. ஆனால், சியர்கேர்ள்ஸ் பங்கேற்றுவிட்டனர்.
இந்தச்சம்பவத்துக்கு நாங்கள் கடுமையாக டெல்லி அணி நிர்வாகத்தை எச்சரித்துள்ளோம் எனத்தெரிவித்தனர். ஆனால், இது குறித்து கருத்து தெரிவிக்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி மறுத்துவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.