IPL 2018:ஒரே போட்டியில் சாதனைகளை தெறிக்க விட்ட தல தோனி!

Default Image

நேற்று இரவு புனேவில்  ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடியாக மனோஜ் திவாரி, மில்லர் 60 ரன்களைச் சேர்த்தனர்.

அடுத்து வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்ப 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தார்.

இருப்பினும் சென்னை அணி கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசியதால் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி தரப்பில் என்கிடி 4 விக்கெட்டுகளையும், தாகூர், பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சஹர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் பேட்டிங் ஆட வந்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அம்பாதி ராயுடு 1 ரன்னில் அவுட் ஆனார். டுபிளிசிஸ் 14 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

5வது ஓவரில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அடுத்து வந்த ஹர்பஜன் சிங் ஓரளவிற்கு விளையாடி ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தினார். அவர் அவுட் ஆன பின் வந்த தீபக் சஹர் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்தார். அவருடைய ஆட்டத்தால் சென்னை அணிக்கு தெம்பு வந்தது.

பின்னர் சுரேஷ் ரெய்னா, தோனி ஜோடி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரெய்னா 48 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை அணி, கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியையும் வென்று வெற்றிக் களிப்புடன் அவர்களது லீக் ஆட்டங்களை முடித்துள்ளது.

4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய என்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் தோனி பல சாதனைகளை படைத்தார் அதில்,1.ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை [216 விக்கெட்டுகள்] வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.

2.ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் [144 கேட்ச்சுகளுடன்] பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார்.

3.தோனி இதுவரை ஆடிய 173 ஐபிஎல் போட்டிகளில், 157 போட்டிகள் பேட்டிங் செய்துள்ளார். இதில், 2888 பந்துகளில் 4007 ரன்கள் எடுத்துள்ளார். [20 அரைசதங்கள், 274 பவுண்டரிகள் மற்றும் 186 சிக்ஸர்கள் அடங்கும்]

4.ஐபிஎல்-லில் 4000 ரன்களை கடந்துள்ளார் தோனி. 4000 ரன்களை எட்டும் 7வது வீரர் தோனி ஆகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்