IPL 2018:ஐ.பி.எல். போட்டியிலும் நான்தான் கிங் என நிருபித்த விராட்!இதுவரை யாரும் செய்யாத சாதனைகளை செய்த கோலி!ரெய்னா,ரோகித் காலி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் , 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 94 ரன்களைக் குவித்தார். மற்றொரு வீரரான எவின் லிவிஸ் 65 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. விராட்கோலியைத் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 92 ரன்களுடன் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருநதார்.
இதன் மூலம், ஐபிஎல் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த சென்னை வீரர் ரெய்னாவின் (4,558 ரன்கள்) சாதனையை முறியடித்தார்.தவிர,ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக 5,000 ரன்கள் கடந்தார் கோலி.
இதன் மூலம் ஒரே அணிக்காக 5,000 ரன்கள் அடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் கோலி. பெங்களூரு அணிக்காக ஐபிஎல்., அரங்கில் இதுவரை 153 போட்டியில் பங்கேற்றுள்ள கோலி 4619 ரன்களும், சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடரில் 424 ரன்கள் என மொத்தமாக 5043 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.
தவிர,மும்பை அணிக்கு எதிராக ஐபிஎல்லில் , தனது 36வது அரை சதத்தை பதிவு செய்த பெங்களூரு கேப்டன் கோலி,ஐபிஎல்.,அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை டெல்லி அணி கேப்டன் காம்பிருடன் (36 அரைசதம்) பகிர்ந்துகொண்டார். இப்பட்டியலில் டெல்லி,ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் (39 அரைசதம்) உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.