தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், மீறினால் மைதானத்திற்குள் புகுந்து கலவரம் செய்து தடுப்போம் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது மக்களின் போராட்ட மனநிலையை மாற்றி கிரிக்கெட் பக்கம் கவனத்தைத் திருப்பும் எனவும் கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த போட்டியை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மீறினால், கிரிக்கெட் நடக்கும் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம் என்றும் கருணாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…