IPL 2018:ஐபிஎல் 2018-ன் முக்கிய வீரரும்,உலகின் இன்றைய மிகச்சிறந்த வீரரும் காயம் காரணமாக விலகினார்…!சோகத்தில் அணியினர்….!
வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் நடைபெறவுள்ளது
ஐபிஎல் 2018-ன் முக்கிய வீரராகவும் உலகின் இன்றைய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான கேகிசோ ரபாடா, ரசிகர்களின் பெரிய ஈர்ப்பாளராகக் கருதப்பட்ட இவர் முதுகு வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
3 மாத காலம் அவர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என்று தெரிகிறது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரபாடாவை ரூ.4.2 கோடிக்கு வாங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்ச்சைகள பல கொண்ட தொடரில் ஆஸி. வீர்ர்களை தன் வேகத்தாலும் ஸ்விங்கினாலும் படுத்தி எடுத்த ரபாடா, 23 விக்கெட்டுகளுடன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4வது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்ததற்கான அறிகுறிகளைக் காட்டினார். 2வது இன்னிங்சில் 8 ஓவர்களையே வீசினார்.
அதன் பிறகு ஸ்கேன் எடுத்த போது காயத்தின் தீவிரம் தெரியவந்தது.
இதனையடுத்து 3 மாத காலம் அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, கவுதம் கம்பீர் தலைமை டெல்லி டேர் டெவில்ஸின் திட்டங்களுக்கு இது ஒரு பின்னடைவே.
அடுத்ததாக தென் ஆப்பிரிகா ஜூலை மாதம் இலங்கையில் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.