IPL 2018:ஏ.பி. டிவில்லியர்ஸ் இருந்தால் போதும் எப்பவுமே எல்லாரையும் சிரிக்கவைப்பார்!ஏன்னா அவரு 360 ஷாட் அப்படி!விராட் கோலி நெகிழ்ச்சி

Published by
Venu

 டெல்லியை வீழ்த்தியது பற்றி பரிசளிப்பு நிகழ்ச்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கேப்டன் விராட் கோலி பேசினார்.

டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் சேர்க்க, டிவில்லியர்ஸ் மிக முக்கியமான 30 ரன்கள் பங்களிப்பு செய்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கேப்டன் விராட் தன்னுடைய இன்னிங்ஸ், டிவில்லியர்ஸ் பற்றி   கூறியதாவது,கடந்த போட்டியில் நான் அடித்த 90 சொச்ச ரன்களை விட இந்த 30 ரன்கள் பெரியது. ஏனெனில் நாங்கள் வெற்றி பெற்றோம். இன்னும் சில புலங்களில் சரி செய்ய வேண்டியுள்ளது. ஆனால் ஏ.பி. போல் ஒரு வீரர் அணியில் இருந்தால் அவர் எப்போதும் உங்களைப் புன்னகைக்கவே வைப்பார்.

எங்கள் ஆட்டம் பற்றி நாங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம். அதன் பிறகு ஏபி போய்க்கொண்டேயிருக்கிறார். 60-70 ரன்கள் கூட்டணி அமைத்தால் போதும் வெல்ல முடியும். கடைசி வரை என்னால் நிற்க முடியாமல் போனது வருத்தமே.

டிரெண்ட் போல்ட் எடுத்த கேட்ச் அசந்து போனேன். அதுவும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இது நடந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. அந்தக் கேட்சைத் திரும்பிப் பார்க்கும் போது நாம் அவுட் ஆனதற்காக வருத்தப்படத் தேவையில்லை என்று தோன்றுகிறது அப்படிப்பட்ட பிரமாதமான கேட்ச் அது.

பந்து வீச்சில் அருமையாகத் தொடங்கினோம். 15 ஓவர்கள் வரை தெளிவாக இருந்தோம். நிறைய பாசிட்டிவ்கள் கிடைத்துள்ளன, இன்னும் சில பகுதிகளைச் சரி செய்ய வேண்டும். அணி நம்பினால் ரசிகர்களும் நம்புவார்கள் அதைத்தான் இன்று பார்த்தோம்.இவ்வாறு கூறினார் விராட் கோலி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago