IPL 2018:என்னதான் இது விதி ‘டக்வொர்த்…!எங்கள் தலைவிதியாக மாறிய ‘டக்வொர்த் விதி …!தோல்வியால் புலம்பும் கம்பீர் …!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடந்தது. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் விளையாடியது.டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தபோது, மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த முறையில் அணியின் கேப்டன் ரஹானே (45), சஞ்சு சாம்சன் (37) மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினார்கள். மற்ற வீரர்களான ஜோஸ்பட்லர் (29), பென் ஸ்டோக்ஸ் (16) ரன்களில் வெளியேறினார்.
ஏறக்குறைய 4 மணிநேர மழைக்கு பின் டக்வொர்த் விதிப்படி, போட்டி 6 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, 71 ரன்கள் இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த முறை கேப்டன் கம்பீர் ஆடத் தொடங்காமல், அதிரடி வீரர் மேக்ஸ்வெல், முன்ரோவை களமிறக்கினார். மிகக் கடினமான இலக்கை தங்களுக்கு சாதகமாக ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர். குறிப்பாக லாஹ்லின், குல்கர்னி ஆகியோர் துல்லியமாகப் பந்துவீசி டெல்லி வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர்.
இதனால், ரன் அவுட் முறையில், முன்ரோ ரன் ஏதும் சேர்க்காமல் விரைவாக ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் ஆடியதால் பதற்றத்துடன் காணப்பட்ட மேக்ஸ்வெலை 17 ரன்களில் துரத்தினார் லாஹ்லின். ரிஸ்பா பந்த் 20 ரன்களிலும் வெளியேறினர். தமிழக வீரர் சங்கர் 3 ரன்களில் பெவிலியன் அனுப்பினார் லாஹ்லின்.
கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய வீரர் லாஹ்லினின் நெருக்கடியான பந்துவீச்சில் டெல்லி அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வி அடைந்தது. இதையடுத்து, டக்வொர்த் விதிப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி முடிந்தபின், ஊடகங்களுக்கு டெல்லி டேர்வெலிஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:’இந்தப் போட்டியை நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளமாக ஜெய்ப்பூர் இருந்தது. ஒருவேளை 20 ஓவர் முழுமையாக நடந்திருந்தால், எந்த இலக்காக இருந்தாலும் அதை சேஸிங் செய்திருப்போம். எங்களின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. ஆனால், மழைக்குப் பின் எங்களுக்கு டக்வொர்த் விதிப்படி 6 ஓவர்களில் 71 ரன்கள்இலக்காக நிர்ணயித்தது மிகவும் கடினமானதாகும். முதல் பந்தில் இருந்து வீணாக்காமல் இலக்கை துரத்தினால் மட்டுமே அடைய முடியும். அதிலும் 2 ஓவர்கள் மட்டுமே பவர்ப்ளே இருந்தது. இவை அனைத்தும் எங்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.