IPL 2018:எனக்கு ஐபிஎல் கிரிக்கெட் ஒன்னும் முக்கியம் இல்லை ..!அது இல்லாம என்னால் சந்தோசமா இருக்க முடியும் …!ஸ்ரீ சாந்த் ஓபன் …!

Default Image

முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில்  தான் ஒருபோதும் ஐபிஎல் ரசிகனல்ல, ஐபிஎல் போட்டிகளைத் தான் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

முதல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்ரீசாந்த், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனால்டின் மோதிர விரலில் கிப்ட்டு வாங்கி முன்னேறியவர், கடைசியில் 2013ம் ஆண்டு இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் அவர் கூறியதாவது,ஐபிஎல் கிர்க்கெட்டின் விசிறியல்ல நான். ஆனால் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். கிளப் மட்ட போட்டிகள் பிடித்திருக்கிறது, அதனைப் பார்த்து வருகிறேன்.

நான் ஐபிஎல் போட்டிகளை விரும்பிப் பார்ப்பதில்லை. எனக்கு ஐபிஎல் மேல் ஆர்வம் போய்விட்டது, அப்படியே பார்த்தாலும் கேரள வீரர்கள் ஆடிம் போது பார்ப்பேன். கேரள கிரிக்கெட் வீரர்கள் நன்றாக ஆடுவதைப் பிடிக்கும்.

என் மேல் பிசிசிஐ தடை விதித்ததற்காக நான் ஐபிஎல் கிரிக்கெட்டை வெறுக்கவில்லை. தடை குறித்து சோகமாகத்தான் உள்ளது ஆனால் நான் அதிலிருந்து நகர்ந்தாக வேண்டும். பிசிசிஐ அதன் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது, நான் என் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறேன். பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச போட்டிகள் ஆடும் மைதானங்களில் நான் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் என் மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறேன், அதில் எனக்கு மகிழ்ச்சியே.

நான் என் பணிகளில் சுறுசுறுபாக இயங்கி வருகிறேன். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடுகிறேன். நிறைய யோகா பயிற்சி செய்கிறேன், பாட்மிண்டன் விளையாடுகிறேன். மலையாளம், கன்னடப் படங்களில் நடித்துள்ளேன். அடுத்த படத்துக்கான ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.

கடவுளின் கிருபையால் எனக்கு அழகான குடும்பம் அமைந்துள்ளது, என் மனைவி, 2 குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறேன்,இவ்வாறு கூறினார் ஸ்ரீசாந்த்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்