IPL 2018:எனக்கு ஐபிஎல்ல புடிச்ச வீரர் இவருதான் !ஏன்னா தன்னோட முதுகுவலியிலும் அப்படி விளையாடினார்!வாயைப் பிளந்த பஞ்சாப் புயல்
பஞ்சாப் அணியின் ஆலோசகராக விரேந்தர் சேவாக் , மகேந்திர சிங் தோனியின் ஆட்டம் நாளுக்கு நாள் சிறப்பாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்15) அன்று பஞ்சாபின் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி, சி.எஸ்.கே. அணியை வெற்றியின் விளிம்புவரை அழைத்துச் சென்றார்.
அந்த போட்டியின்போது தோனி, அவருக்கு ஏற்பட்ட முதுகுவலியுடன் விளையாடி, அதிரடியாக 44 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இருப்பினும் அவருடைய முயற்சி அணியின் வெற்றிக்கு வழிவகுக்கவில்லை. 197 ரன்களை சேஸ் செய்ய முயன்று 193 ரன்களை எடுத்து 4 ரன்களில் சி.எஸ்.கே. அணி தோல்வியைத் தழுவியது.
ஆனால் தோனியின் இந்த அதிரடியான ஆட்டத்தை கண்டு பஞ்சாப் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் சேவாக் வியப்படைந்துள்ளார். சேவாக், தோனியின் ஆட்டம் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,” இந்த ஐ.பி.எல். தொடரில் என்னை கவர்ந்தவர்களில் தோனியும் ஒருவர். அவர் இந்த வயதிலும், தன்னுடைய முதுகுவலியையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபட்டார். தோனி இடத்தில் வேறொரு வீரர் இருந்திருந்தால், அவர் களத்தை விட்டு வெளியேறி, வீரர்கள் அறைக்கு சென்றிருப்பார். ஆனால் தோனி ஒரு கேப்டனாக, பொறுப்புகளை ஏற்று கடைசிவரை களத்தில் நின்றார்”.
சி.எஸ்.கே. அணி 30 பந்துகளில் 76 ரன்கள் தேவை என்ற நிலையில் இருக்கும்போது, தோனி 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் அணியை வெற்றிக்கு மிக அருகில் வரை கொண்டுச்சென்றார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் ஷர்மா சிறப்பாக பந்து வீசி, அதுவரை விளையாடிய, மூன்று போட்டிகளில் பஞ்சாப் அணியின் இரண்டாவது வெற்றிக்கு வித்திட்டார். இது இந்த தொடரில் தோனி தலைமையிலான அணியின் முதல் தோல்வியாகும்.
தோனியின் சிக்ஸர்களை பார்க்கும்போது, அது அவர் முதுகுவலியால் அவதிப்படுகிறார் என்று தெரியாதவாறு இருந்தது.” நான் தோனியின் ஆட்டத்தை மட்டுமல்ல அவரின் அணுகுமுறையைக் கண்டும் வியப்படைகிறேன். தோனி இடத்தில் வேறொரு வீரர் இருந்திருந்தால், அவர் களத்தை விட்டு சென்றிருப்பார். தோனி ரன் எடுக்க ஓடவும் சிரமப்பட்டார், இருப்பினும் அவர் கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் அடித்த சிக்ஸர்களை பார்க்கும்போது, முதுகுவலியால் அவதிபடுபவர் அடித்த சிக்ஸர்கள் போல் தெரியவில்லை. வலியை பொருட்படுத்தாமல் அந்த சிக்ஸர்களை அவர் அடித்தார். அவர் களத்தில் தடுமாறுவதை எதிரணிக்கு காட்டியதில்லை. தோனிக்கு நாம் முழுப் பாரட்டையும் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் தோனி களத்தை விட்டு வெளியேறியிருந்தால், சி.எஸ்.கே. அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கக் கூடும்” பஞ்சாப் அணியின் ஆலோசகராக விரேந்தர் சேவாக் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.