IPL 2018:எங்கள் அணியின் மிகப்பெரிய ஆயுதமே இவருதான் ….!சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன்…!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்,”மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே மிக முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மோதியது .இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
களமிறங்கிய மும்பை அணி ரோஹித் (11),கிஷன் (9),லூவிஸ் (29),க்ருனால் பாண்டியா (15),பொல்லார்ட் (28) ரன்களை எடுத்து வெளியேறினர்.
பின்னர் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் யாதவ் மற்றும் பொல்லார்டு தலா 28 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்கள் ஆகும்.
ஐதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா, ஸ்டான்லேக், கெளல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ரஷித் கான், ஷாகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க வீரர்களாக சஹா மற்றும் தவான் களமிறங்கினர்.
இதில் சஹா (22)ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் (9) ,தவான் (45),மனிஷ் பாண்டே (11),ஷாகிப்(12),யூசுப் பதான் (14) ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
சந்தீப் சர்மா ,சித்தார்த் கவுள்,ரசித் கான் டக் அவுட் ஆகினர். மும்பை அணி தரப்பில் மார்கண்டே 4 விக்கெட்டுகள்,முஷ்டபிசூர் 3 விக்கெட்டுகள் ,பூம்ரா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது .
இது குறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவது, “இந்த மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இக்கட்டான கடைசி நேரத்தில் ஹூடாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அதே போல் ரசீத் கானின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது, இதன் காரணமாகவே அவர் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். எங்கள் அணியின் மிகப்பெரும் ஆயுதமே ரசீத் கான் தான். ரசீத் கானை போல் எங்கள் அணியில் நிறைய இளம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர், அவர்களும் தங்கள் திறமையை சரியாக வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சந்தீப் சர்மாவும் இன்றைய போட்டி சிறப்பாக பந்துவீசினார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.