Categories: ஐ.பி.எல்

IPL 2018:எங்கள் அணியின் பலத்தைப் பார்த்த எதிரணிகள் நாங்கள் வெற்றி பெற விரும்பியிருக்க மாட்டார்கள்!திமிராக பதில் கூறிய விராட் கோலி

Published by
Venu

 சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை அச்சுறுத்தும் விதமாக  பின் தங்கியிருந்த ஆர்சிபி அணி 12 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

அந்த அணியினரிடத்தில் காணப்படும் புதிய வெறி மற்ற அணிகளுக்கு கொஞ்சம் கதிகலக்கவே செய்யும். நேற்று 218 ரன்களை விளாசி 14 ரன்களில் வெற்றி பெற்றது, இந்நிலையில் ஒரு செட்டில்டு அணியாக ஆர்சிபி தன் பலத்தைக் கண்டுபிடித்துக் கொண்டது என்று விராட் கோலியே தெரிவித்து விட்டார்.

நேற்று அலெக்ஸ் ஹேல்ஸ் அபாயகர பார்மில் இருந்தார். முதலில் சவுதியை நேராக ஒரு சிக்ஸ். பிறகு உமேஷ் யாதவ் வேகத்திலும் ஒரு பவுண்டரி, ஒரு ஹெலிகாப்டர் சிக்ஸ், என்று கலக்கி வந்த போது டீப் ஸ்கொயர் லெக்கில் யாதவ்வின் இதே ஓவரில் சவுதி டைவ் அடித்து தரைதட்ட இருந்த பந்தை துல்லியமாக கேட்ச் எடுத்தார், நடுவருக்கு சந்தேகம் எனவே அவர் அவுட் என்று லேசாக கையை உயர்த்தினாலும் எதற்கும் 3ம் நடுவரை கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் 3ம் நடுவர் பலரது அதிச்சிகளுக்கிடையே நாட் அவுட் என்றார்.

கோலி, சவுதி ஆர்சிபி ரசிகர்கள், தொலைக்காட்சி பார்வையாளர்கள் என்று அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும், மைக்கேல் கிளார்க் ’என்னால் நம்ப முடியவில்லை’ என்று வர்ணனையிலிருந்து கதறினார். கடைசியில் 37 ரன்களை எடுத்த ஹேல்ஸ், மொயின் அலி பந்தை ஒரு அடி எடுத்து வைத்து மிட்விக்கெட்டில் பொளேர் என்று அறைந்தார். பந்து சிக்சுக்குச் சென்று கொண்டிருக்கிறது. டிவில்லியர்ஸ் எம்பினார் பந்து காற்றில் சற்றே திரும்பியது டிவில்லியர்ஸ் விடவில்லை வலது கையை நீட்டி வானிலிருந்து பந்தைப் பறித்தார். அதி அற்புத கேட்ச். போல்ட் கோலிக்கு பிடித்த கேட்சுக்கு சவால் அளிக்கும் கேட்ச் ஆகும் இது. ஒட்டுமொத்த ஆர்சிபி அணியும் டிவில்லியர்ஸைப் பாராட்ட அவர் இடத்துக்குச் சென்றது.

ஆட்டம் முடிந்த பிறகு இந்த கேட்ச் பற்றி விராட் கோலி விதந்தோதிக் கூறும்போது, “அது ஒரு ஸ்பைடர்மேன் கேட்ச் ஆகும், சாதாரண மனிதர்களாக அந்த மாதிரியெல்லாம் கேட்ச் எடுக்க முடியாது” என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

அதே போல் அவரது பேட்டிங் பற்றி கூறும்போது, “அவரது ஷாட்கள் இன்னமும் கூட என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. பீல்டிங்கும் நம்ப முடியாத ரகத்தில் உள்ளது” என்றார்.

ஆட்டம் பற்றிக் கூறும்போது, “உணர்ச்சிகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன பிரச்சினைகள் இல்லை. இது போன்ற போட்டிகளை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். பவுலர்களுக்கு நியாயமாகப் பேச வேண்டும் அவர்களுக்கு எதுவும் எளிதல்ல. பனிப்பொழிவும் இருந்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் இயல்பு குலையாமல் வீசினர்.

இப்போது உத்வேகத்துடன் ராஜஸ்தானை எதிர்கொள்ளச் செல்கிறோம். ஏபி, கொலின், மொயின் அபாரம். இந்த 11 வீரர்களுடன் அணி செட்டில் ஆகிவிட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அணியின் பலத்தைப் பார்த்த எதிரணிகள் நாங்கள் வெற்றி பெற விரும்பியிருக்க மாட்டார்கள்” என்றார் விராட் கோலி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago