IPL 2018:உங்களுக்கு இந்த சாதனைகள் தெரியுமா?யாரு பெட்டர்?
அதிக சதம் அடித்தவர், அதிக அரை சதம் அடித்தவர், சிக்ஸர், பவுண்டரிஅதிகமாக அடித்த வீரர், விக்கெட்டுகள், மெய்டன் எடுத்த பந்துவீச்சாளர் ஆகியோரின் விவரங்கள் 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் வந்துள்ளன.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 51 ஆட்டங்களைக் கொண்ட 11-வதுசீசன் ஐபிஎல் போட்டியில் பல்வேறு சாதனைகளை வீரர்கள் படைத்துள்ளனர்.
அதிக ரன்:
சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் 17 போட்டிகளில் பங்கேற்று 735 ரன்கள் சேர்த்ததே தனி ஒருவீரர் சேர்த்த அதிகபட்ச ரன்களாகும். இவர் ஆரஞ்சு தொப்பி வென்றார். 2-ம் இடத்தில் ரிஷாப் பந்த்(684 ரன்கள்), 3-ம் இடத்தில் லோகேஸ் ராகுல் (659 ரன்கள்) உள்ளனர்.
ஒரு ஓவரில் அதிக ரன்:
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 28 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும்.
ஜோஸ் பட்லரும் 28 ரன்கள் சேர்த்துள்ளார்.
அதிக பவுண்டரி:
டெல்லி அணி வீரர் ரிஷாப் பந்த் 68 பவுண்டரிகள் அடித்ததே அதிகபட்சமாகும். 2-வது இடத்தில் லோக்கேஸ் ராகுல் (66), வில்லியம்ஸன் (64) 3-ம் இடத்திலும் உள்ளனர்.
அதிக சிக்ஸர்:
டெல்லி அணி வீரர் ரிஷாப் பந்த் 37 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாகும். 2-வது இடத்தில் வாட்ஸன் (35), 3-வது இடத்தில் அம்பதி ராயுடு (34) உள்ளார்.
அதிக அரைசதம்:
சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் 8 அரை சதம் அடித்துள்ளார். 2-ம் இடத்தில் கே.எல் ராகுல் (6), டிவில்லியர்ஸ்(6) 3-ம் இடத்திலும் உள்ளனர்.
அதிக சதம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்ஸன் 2 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.
விரைவு சதம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்ஸன் 51 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாகும்.
அதிகபட்ச ஸ்கோர்:
டெல்லி வீரர் ரிஷாப் பந்த் 128 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.
சிறந்த ஸ்டிரைக் ரேட்:
ராஜஸ்தான் வீரர் கிருஷ்ணப்பா கவுதம் 196.37 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளதே சிறந்ததாகும்.
மிகப்பெரிய சிக்ஸ்:
பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் 111 மீட்டர் உயரத்துக்கு அடித்த சிக்ஸரே உயரமான சிக்ஸராகும்.
பந்துவீச்சு
அதிக விக்கெட்:
கிங்ஸ்லெவன் வீரர் ஆன்ட்ரூ டை 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாகும்.
அதிக மெய்டன்:
சிஎஸ்கே வீரர் லுங்கி இங்கிடி 2 மெய்டன் ஓவர்கள் வீசியதே சிறப்பானதாகும்.
அதிக டாட் பால்:
சன் ரைசர்ஸ் வீரர் ராஷித் கான் 17 போட்டிகளில் 68 ஓவர்கள் வீசி 167 டாட்பந்துகளை வீசியுள்ளதே சிறப்பானதாகும்.
சிறந்த எக்கானமி:
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஈஷ் சோதி ஒரு ஓவருக்கு 5.86 ரன்கள் கொடுத்ததே சிறந்த பந்துவீச்சு, எக்கானமி ஆகும்.
அதிக வேகம்:
ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர் ஜேப்ரா ஆர்சர் மணிக்கு 152 கி.மீ வேகத்தில் வீசியதே அதிவேக பந்துவீச்சாகும்.
மோசமான பந்துவீச்சு:
சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பாசில் தம்பி ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் வீசி 70 ரன்கள் வாரிவழங்கியதே மோசமான பந்துவீச்சாகும்.அடுத்த இடத்தில் உமேஷ் யாதவ் (59), ஷிவம் மவி (58) ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.