IPL 2018:இரண்டுவருடங்கள் தவமிருந்த அணிகள் நேருக்கு நேர் மோதல்!ஏக்கத்தை தீர்க்கப் போவது சென்னையை ?ராஜஷ்தானா ?

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில்  மோதுகின்றது. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் காவிரி பிரச்சினை போராட்டம் காரணமாக புனேவில் நடைபெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2 அணிகளும் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடரை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டது. ரஹானே சீராக விளையாடி வருகிறார். அதிரடியாக விளையாடும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறுகிறார்.

கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் அவரால் சிறந்த பங்களிப்பை வழங்க இயவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் டி’ ஆர்சி ஷார்ட் ஆகியோரிடம் இருந்தும் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இதில் டி’ ஆர்சி ஷார்ட் கடந்த ஆட்டத்தில் 43 பந்துகளுக்கு 44 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். பிக்பாஷ் தொடரில் அதிரடியில் மிரட்டிய அவர், தொடக்கத்தில் மந்தமாக விளையாடுவது சற்று பின்னடைவாக உள்ளது.

Image result for chennai super kings 2018

பந்து வீச்சை பொறுத்தவரையில் கிருஷ்ணப்பா கவுதம், கோபால் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டராகவும், ஜெயதேவ் உனத்கட் பந்து வீச்சிலும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக இணைந்து வீரர்கள் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். போட்டிக்கான மைதானம் மாறினாலும் சென்னை அணி வீரர்களின் ஆட்டத்திறனில் குறைவிருக்காது என்றே கருதப்படுகிறது. முதல் 2 ஆட்டங்களிலும் கடைசி ஓவர்களில் த்ரில் வெற்றி கண்ட சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக நெருக்கமாக அமைந்த ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. முதல் ஆட்டத்தில் பிராவோவும், 2-வது ஆட்டத்தில் சேம் பில்லிங்ஸூம் தங்களது அதிரடி ஆட்டத்தால் வெற்றி தேடிக் கொடுத்திருந்தனர்.

பஞ்சாப் அணிக்கு எதிராக முதுகுவலியுடன் விளையாடினாலும் தோனி கடைசி வரை போராடினார். 44 பந்துகளில் 79 ரன்கள் விளாசிய அவர், வெற்றியை எட்டக்கக்கூடிய நிலையிலேயே தவறவிட்டார். இந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் டுவைன் பிராவோவை களமிறக்காமல் ரவீந்திரஜடேஜாவை களமிறக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

Image result for chennai super kings 2018

டு பிளெஸ்ஸிஸ் உடல் தகுதியை எட்டி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் வாட்சன் அல்லது சேம் பில்லிங்ஸ் நீக்கப்படக்கூடும். முரளி விஜய்யும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் விளையாடாத பட்சத்தில் அம்பாட்டி ராயுடு மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் இம்ரன் தகிர் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்