IPL 2018:இந்த வருடம் ஐபிஎல்லில் யாருக்கு என்ன விருது?விவரம் இதோ
மகாவெற்றியுடன் ஐபிஎல் 2018 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக முடிந்தது. தொடக்கப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருந்ததையடுத்து வெற்றியுடன் தொடங்கி வெற்றிக்கோப்பையுடன் முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இதற்கு முக்கியக் காரணம் கேப்டன் தோனி, அவரது உறுதியும் அமைதியும் பெரிய அளவுக்கு வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்தது, அதன் உச்ச கட்டமாக வாட்சன் நேற்று வெளுத்துக் கட்டி சதம் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது வாட்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் வேறு சில வீரர்களும் விருதுகளை வென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த மைதானம்:
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
7 போட்டிகளுக்கும் குறைவாக ஆடப்பட்டதில் சிறந்த ஐபிஎல் மைதானம்:
மொஹாலி
சிறந்த வளரும் வீரர்:
ரிஷப் பந்த், ரூ10.லட்சத்துக்கான காசோலையைப் பெற்றார்.
ஃபேர் பிளே விருது:
மும்பை இந்தியன்ஸ்
சிறந்த கேட்ச்:
விராட் கோலிக்கு ட்ரெண்ட் போல்ட் எடுத்த அந்த திகைக்க வைத்த கேட்ச்.
சிறந்த ஸ்ட்ரைக் ரேட்:
சுனில் நரைன்
சீசனின் மிகச்சிறந்த ஸ்டைலிஷ் வீரர்:
ரிஷப் பந்த்
புதியன புகுத்தும் யோசனைக்கான விருது:
தோனி
அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் கேப்:
ஆண்ட்ரூ டை.
அதிக ரன்களுக்கான ஆரஞ்சு கேப்:
கேன் வில்லியம்சன்.
சீசனின் மதிப்பு மிக்க வீரர்:
சுனில் நரைன்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.