IPL 2018:இதுவரை ஐபிஎல்லில் அதிவேக அரை சதங்கள்…!யாரு டாப் இந்த பட்டியலில்?இதோ விவரம் …

Default Image

அதிவேக அரைசதங்கள் ஐபில் கிரிக்கெட்டில்  சில நிகழ்ந்துள்ளன, இந்த அரைசதங்கள் அணியின் வெற்றிகளைத் தீர்மானித்துள்ளன. அவற்றில் சுவையான் சில இன்னிங்ஸ்கள் இதோ. இதில் ரெய்னாவின் பாஸ்ட் அரைசதம் ஒன்று வெற்றியைத் தரவில்லை.

Image result for adam gilchrist DECCAN CHARGERS ipl

ஆடம் கில்கிறிஸ்ட்: டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணிதான் இன்று பெயர் மாறி, உரிமையாளர்கள் மாறி சன் ரைசர்ஸ் ஆக மாறியுள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் ஆக 2009-ம் ஆண்டு இருந்த ஐபிஎல் அணியில் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கிழி கிழி என்று கிழித்தார். அப்போது டெல்லி அணியில் ஆடினார் டிவிலியர்ஸ். சேவாக் கேப்டன், சேவாக் 31 பந்துகளில் 39 ரன்களை அடித்தார். வார்னர், கம்பீர் இருவருமே டக் அவுட் ஆக, சேவாக், தில்ஷான் (65), டிவில்லியர்ஸ் (26) ஆகியோர் ஸ்கோரை ஒருவழியாக 153/8 என்று கொண்டு சென்றனர். ரயான் ஹேரிஸ் 3 விக்கெட்டுகளையும் ஆர்.பி.சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டெக்கான் அணியில் கில்கிறிஸ்ட், கிப்ஸ், சைமண்ட்ஸ், ரோஹித் சர்மா ஆகிய அதிரடி வீரர்கள் இருந்தனர், இலக்கை விரட்டிய போது டர்க் நேனஸ் என்ற ஒரு பவுலர் கில்கிறிஸ்டின் ஆவேசத்துக்குச் சிக்கினார். முதலில் ஷார்ட் பிட்ச் லெக் திசையில் நான்கு, பிறகு ஒரு ஓவர் பிட்ச் பவுலருக்குப் பின்னால் நான்கு. பிறகு பேக்வர்ட் பாயிண்டில் ஒரு நான்கு பேக்ஃபுட் பஞ்ச் ஷாட்டில் ஒரு நான்கு, அடுத்து ஒரு வெறும் புஷ்தான் நேராக பவுண்டரி என்று முதல் ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசினார் கில்கிறிஸ்ட் அத்தனையும் முறையான கிரிக்கெட் ஷாட்கள்.

சங்வான் வந்தார் அவரை 2 பவுண்டரிகள் டீப் மிட்விக்கெட் மேல் சிலபல படிக்கட்டுகள் தாண்டி பந்து சிக்ஸ். நெஹ்ராவின் புல்டாஸ் பேங்! சிக்ஸ். 15 பந்துகளில் 49, 17வது பந்தில் அரைசதம். சேவாக் வீச வந்தார், ஃப்ரீ ஹிட் சிக்ஸ் உட்ப்ட 3 சிக்சர்களை விளாசினார் கில்கிறிஸ்ட். 35 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி 85 ரன்களில் மிஸ்ராவிடம் அவுட் ஆனார். 10 ஓவர்கள் முடிவிலேயே 102 ரன்கள் வந்தது, டெக்கான் அணி மிகச்சுலபமாக வென்றது.

Image result for ROBIN UTHAPPA ipl

ராபின் உத்தப்பா: ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் அப்போது கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இல்லாத அணியாக இருந்தது… அதாவது 2010 ஐபிஎல் தொடராகும் அது. தென் ஆப்பிரிக்க, இந்திய சுவர்களான ஜாக் காலிஸ், ராகுல் திராவிட் ஆடிய காலம். மணீஷ் பாண்டேவுக்கு 20 வயது. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டம் அது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சங்கக்காரா கேப்டன் 203/3 ரன்கள் குவித்தது பஞ்சாப்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டன். மணீஷ் பாண்டே, காலிஸ் தொடக்கத்தில் 8 ஓவர்களில் 74 ரன்கள் விளாசினர். பாண்டே 26 பந்துகளில் 38, காலிஸ், 55 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 89.

ஆனால் உத்தப்பா இறங்கினார். ஸ்ரீசாந்த், சாவ்லா பந்து வீச்சை கண்டபடி அடித்தார், ஸ்ரீசாந்த் 3 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்தார், உத்தப்பா 19 பந்துகளில் அரைசதம், பிறகு 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51. 18.5 ஓவர்களில் 204/2 என்று பெங்களூருவில் அபார வெற்றி பெற்றது ஆர்சிபி.

Image result for david miller ipl

டேவிட் மில்லர்: 2014 ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் நடந்த போட்டியாகும் இது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 191 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன், வாட்சன் அரைசதங்கள். தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணியில் கிளென் மேக்ஸ்வெல் 45 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார், டேவிட் மில்லர் 6 ஒவர்களில் 66 ரன்கள் தேவை என்ற நிலையில் இறங்கி 19 பந்துகளில் அரைசதம் கண்டார். தவல் குல்கர்னி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்சர்களுடன் மொத்தம் 6 சிக்சர்களை வாங்கினார் டேவிட் மில்லர். 18.4 ஓவர்களில் 193/3. டேவிட் மில்லருடன் நாட் அவுட்டாக இருந்தது யார் தெரியுமா? செடேஸ்வர் புஜாரா, இவர் 38 பந்துகளில் 40 ரன்களை 3 பவுண்டரிகளுடன் எடுத்தார்.

Image result for andre russell ipl

ஆந்த்ரே ரஸல்: 2015 ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆந்த்ரே ரசல் முக்கியமான 19 பந்து அரைசதம் கண்டார். கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு இது மோசமான ஐபிஎல் தொடராக அமைந்தது இந்தப் போட்டிக்கு முன்பாக 8 போட்டிகளில் தோல்வி கண்டிருந்தனர், இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் 183 ரன்கள் பேட்டிங்கில் குவித்து கொல்கத்தாவின் டாப் ஆர்டரை வீழ்த்தி 83/4 என்று தடுமாறச் செய்தனர், ஆனால் ஆந்த்ரே ரசல் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் போட்டியை கொல்கத்தா பக்கம் திருப்பினார்.

Image result for KIERON POLLARD ipl

கெய்ரன் பொலார்ட்: 2016 ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் கண்டார்.

Image result for chris LYNN ipl

கிறிஸ் லின்: ஐபிஎல் 2017, குஜராத் லயன்ஸ் அணி ரெய்னா, தினேஷ் கார்த்திக் அதிரடியில் 183/4 என்று ரன் குவிக்க, தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கிறிஸ் லின் 19 பந்துகளில் அரைசதம் கண்டதோடு 41 பந்துகளில் 6 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 93 நாட் அவுட். கம்பீர் 76 நாட் அவுட், நோலாஸில் ஜெயித்தது கொல்கத்தா.

Image result for chris MORRIS ipl

கிறிஸ் மோரிஸ்: 2016 ஐபிஎல்-இல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி தடுமாறிக் கொண்டிருந்த போது 17 பந்துகளில் விளாசிய அரைசதம் வெற்றியை அளிக்கவில்லை 1 ரன்னில் டெல்லி தோற்றது.

Image result for chris gayle ipl

கிறிஸ் கெய்ல்: 2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணிக்காக கெய்ல் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதே இன்னிங்ஸில்தான் 30 பந்துகளில் சதம் கண்டு அதிவேக டி20 சதமும் கண்டார் கெய்ல். 66 பந்துகளில் பிரமிப்பூட்டும் 175. இதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டிலேயே மிகப்பெரிய இன்னிங்ஸ் அதாவது 2008 ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் போட்டியிலேயே பிரெண்டன் மெக்கல்லம் அடித்த இன்னிங்ஸுக்குப் பிறகு மிகச்சிறந்த அதிரடி கெய்லுடையதுதான்.

Image result for SURESH RAINA IPL

சுரேஷ் ரெய்னா: ஐபிஎல் 2014-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டம் சேவாகின் 58 பந்து 122 அதிரடியை சற்றே மிரட்டிய அதிரடி ரெய்னாவுடையது. பஞ்சாப் அணி சேவாகின் அதிரடியில் 226 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா, சேவாகை ஷாட்டுக்கு ஷாட் மேட்ச் செய்து 25 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் விளாசி 87 ரன்கள் எடுத்தாலும் சென்னை அணி 202/7 என்று தோற்றது. தோனி 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று 42 நாட் அவுட்டாக இருந்தாலும், சிறந்த பினிஷரால் பினிஷ் செய்ய முடியவில்லை.

Image result for yusuf pathan ipl

யூசுப் பதான்: ஐபில் 2014, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக யூசுப் பத்தான் 15 பந்துகளில் அரைசதம் கண்டார். டேல் ஸ்டெய்னை ஒரே ஓவரில் 26 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. 15.2 ஒவர்களில் 161 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 14.2 ஓவர்களில் வென்றது கொல்கத்தா, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

சுனில் நரைன்: ஐபிஎல் 2017-ல் அந்த புகழ்பெற்ற போட்டியில் தொடக்கத்தில் இறங்கி ராயல் சாலஞ்சர்ஸ் பந்து வீச்சை நோகடித்தார் நரைன் 15 பந்துகளில் அரைசதம், இவரும் கிறிஸ் லின்னும் சாத்திய சாத்தில் 10 ஒவர்களுக்குள் ஆட்டம் முடிந்து விடும் போல்தான் இருந்தது. ஆனால் 15 ஓவர்களில் வெற்றி பெற்றது. பிறகு 2018ல் நேற்று 17 பந்துகளில் இதே ஆர்சிபியுடன் அதிரடி அரைசதம் கண்டார் சுனில் நரைன்

அதிவேக ஐபிஎல் அரைசத நாயகன் கே.எல்.ராகுல்: 15 பந்துகள் அரைசதம் தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் வேகமான அரைசதமாக இருந்ததை கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி  கே.எல்.ராகுல் அருமையான கிரிக்கெட்டிங் ஷாட்களுடன் 14 பந்துகளில் அரைசதம் கண்டு முறியடித்தார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மொகமது ஷமியை சாத்தினார், அமித் மிஸ்ராவின் முதல் ஓவர் தாறுமாறாக அமைய 24 ரன்கள் விளாசினார். கிங்ஸ் லெவன் வெற்றியில் இந்த அரைசதம் பிரதான காரணம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்