ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு பந்துவீச்சாளரும், ஒவ்வொரு விதமாகப் பந்துவீச்சை தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிவரை எனக்குத் தெரிந்து லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவர்கள்தான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கான துருப்புச்சீட்டாக இருந்து வந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு அணியிலும் லெக்ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.ஏன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆப்-ஸ்பின்னராக இருந்தால் கூட அவரே இப்போது லெக் ஸ்பின் வீசும் அளவுக்கு மாறிவிட்டார். இதிலிருந்தே தெரிகிறது லெக்ஸ்பின்தான் வெற்றிகரமான பந்துவீச்சாக மாறிவருகிறது என்பதை அறியலாம். அதனால் மற்ற பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் லெக்ஸ்பின்னர்கள் வெற்றியாளர்களாக இருந்து வருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் கரண் சிங் என்ற லெக்ஸ்பின்னர் இருந்தால்க கூட, கூடுதலாக இம்ரான் தாஹீர் ஒருவர் இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள மார்க்கண்டே சிறப்பாக லெக் ஸ்பின் வீசுகிறார். சிறந்த லெக்ஸ்பின்னர் ஒருவர் இருந்தால், அணிக்குக் கூடுதல் பலமாகவே இருக்கும் என நான் கருதுகிறேன். புவனேஷ்வர் கடந்த 3ஆண்டுகளாகச் சிறப்பாக பந்துவீசிவருகிறார். இந்த 3 ஆண்டுகளில் பல விஷயங்களைக் கற்று, நன்கு தேறி இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் மட்டுமல்ல, கிரிக்கெட் என்பதே பேட்ஸ்மேன்களுக்கான கேமாகும். ஒருபோதும் பந்துவீச்சாளர்களுக்கான போட்டியாக இருக்காது. ஐபிஎல் தொடங்கிய நிலையிலும் கூட அது பந்துவீச்சாளர்களுக்கான போட்டியாக மாறியது இல்லை. டி20 போட்டிகள் பேட்ஸ்மன்கள் திறமையைவளர்த்துக்கொள்ள மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களும் தங்களை முன்னேற்றிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.