IPL 2018:அமெரிக்காவிலேயே போட்டி நடத்தினாலும் விசில் போடதார தப்பட்டையோட தேரில் வருவது என் தமிழினம்!நீங்க வேற லெவல் மாஸ்யா!விசில் வீரர் நெகிழ்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங், அமெரிக்காவிலேயே போட்டி நடத்தினாலும் விசில்போட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழனம் உங்கள் அன்புக்கு நானடிமை, நீங்க வேற லெவல் மாஸ்யா என கூறியுள்ளார்.
ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங். இவர் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தமிழில் டுவீட் செய்து டுவிட்டரை கலக்கி வருகிறார்.இந்நிலையில்,தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் புனேவிற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து,புனேவில் நாளை நடக்கும் ராஜஸ்தான்-சென்னை அணி போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான சென்னை சூப்பா கிங்ஸ் ரசிகாகள் சிறப்பு ரயில் மூலம் இன்று புனே புறப்பட்டனர்.இந்நிலையில்,இது குறித்து ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்,பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை”.அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா ரசிகர்களின் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் தயாராகுங்கள் புனே எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.