IPL 2018:அப்ரிடி விவகாரத்தில் கொதிதேளுந்த இந்திய வீரர்கள் …!அடங்கிப்போன விராத் கோலி?அடங்கிப்போக காரணம் என்ன ?
காஷ்மீர் விவகாரம் குறித்து கடுமையாக ட்வீட் செய்ய பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரீடி ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்தன, கவுதம் கம்பீர் அப்ரீடி ட்வீட்டுக்கு கடுமையாகக் கிண்டல் செய்து ட்வீட் செய்தது பரபரப்பானது.
இந்நிலையில் விராட் கோலியிடம் ஷாகித் அப்ரீடியின் காஷ்மீர் பற்றிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப விராட் கோலி கூறியதாவது:
இந்தியராக நம் நாட்டுக்கு எது சிறந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதையே விரும்புவோம். என் ஆரவங்கள் எப்போதும் நம் நாடு பற்றியதே. எனவே இந்திய நலன்களை எதிர்ப்பதற்கு நான் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன்.
ஆனால் இதனைக் கூறும்போதே சில விவகாரங்கள் குறித்து கருத்துக் கூறுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவுதான். அந்தந்த விவகாரங்கள் குறித்த முழு அறிவில்லாமலோ அதன் நுட்பங்கள், இண்டு இடுக்குகள் தெரியாமலோ நான் கருத்து கூறுவதில் ஈடுபடமாட்டேன். நம் முன்னுரிமை நம் தேசத்துக்குத்தான்.இவ்வாறு கூறினார் விராட் கோலி.
இதே அப்ரீடி கருத்து குறித்து கபில்தேவ் கூறும்போது, “யார் அவர்? அவருக்கு ஏன் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில பேர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது” என்றார்.
சுரேஷ் ரெய்னா காட்டமாக தனது ட்விட்டரில் கூறும்போது, “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர். என்னுடைய மூதாதையர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்தான். பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதத்தையும் மறைமுகப் போரையும் நிறுத்துமாறு அப்ரீடிபாய் பாகிஸ்தானிடம் கூறுவார் என்று நம்புகிறேண்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.