இப்போது, ‘அந்தர்பல்டி’ அடித்து ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டேன் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் அப்ரிடி கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், கவுதம் கம்பீர் கேப்டன் விராட் கோலி, ரெய்னா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து, பதிலடி கொடுத்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் எரியும் தீயில் நெய் வார்த்தது போல், மீண்டும் அடுத்த கருத்தை அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு செய்தி சேனலுக்கு அப்ரிடி நேற்று பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு உங்களை விளையாட அழைத்தால் செல்வீர்களா என நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி, இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியைக் காட்டிலும் எதிர்காலத்தில் மிகப்பெரியதாக உருவாகும். ஐபிஎல் போட்டி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என்னை விளையாட அழைத்தால் கூட நான் ஐபிஎல் போட்டிக்கு வரமாட்டேன். எங்கள் நாட்டில் நடக்கும் பிஎஸ்எல் போட்டிதான் மிகப்பெரியது, விரைவில், ஐபிஎல் போட்டியை எங்களுடைய பிஎஸ்எல் போட்டி பின்னுக்குத் தள்ளும்.
இப்போதுள்ள நிலையில் நான் பிஎஸ்எல் போட்டியில் விளையாடுவதைத்தான் விரும்புகிறேன். ஐபிஎல் போட்டி எனக்கு தேவையில்லை. அதில் விளையாடவும் ஆசையில்லை, ஒருபோதும் ஆசைப்பட்டதும் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.