IPL 2018:அது எப்படி அவ்ளோ ரன் போச்சு!என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியல? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி

Published by
Venu

ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனில் அதிரடி ஆட்டத்தால்  19 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. பெங்களூருவில் நேற்று மாலை நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங் தேர்வு செய்தது.

ராயல்ஸ் அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரகானே 36, ஷார்ட் 11 ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை காட்டினார். 10 ஓவரில் 76 ரன் எடுக்கப்பட்டிருந்த நிலையில், பென் ஸ்டோக்சுடன் இணைந்து சாம்சன் அதிரடியாக ஆடினார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்கள் பறக்க, சாம்சன் 34 பந்தில் அரைசதம் விளாசினார்.

ஸ்டோக்ஸ் 27 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த பட்லர் (23 ரன்) நல்ல ஒத்துழைத்து தந்தார். இதனால் கடைசி வரை சாம்சனின் அதிரடி தொடர்ந்ததால் ராயல் அணி கடைசி 10 ஓவரில் 141 ரன்களை விளாசியது. அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. சாம்சன் 10 சிக்சர், 2 பவுண்டரியுடன் 45 பந்தில் 92 ரன்னுடனும், திரிபாதி 5 பந்தில் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி வெற்றிக்காக கடுமையாக போராடியது. டிகாக் 26, மெக்கல்லம் 4 ரன்னில் வெளியேற, கேப்டன் கோஹ்லி 26 பந்தில் அரைசதம் விளாசினார்.

ஆனால், ஸ்ரேயாஷ் கோபால், கோஹ்லி (57 ரன், 30 பந்து), டிவில்லியர்ஸ் (20) இரு முக்கிய விக்கெட்டை வீழ்த்த, ஆர்சிபியின் ரன் வேகம் சரிந்தது. கடைசி கட்டத்தில் மன்தீப் சிங்கும் (47* ரன், 25 பந்து), வாஷிங்டன் சுந்தரரும் (35 ரன், 19 பந்து) அதிரடியாக ஆடி கடுமையாக முயன்றும் வெற்றியை எட்ட முடியவில்லை.

ஆர்சிபி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய கோபால் 4 ஓவரில் 22 ரன் மட்டுமே தந்து 2 விக்கெட் கைப்பற்றினார். 92 ரன் விளாசிய சாம்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி கூறியதாவது, இந்த போட்டியில் எங்கு தவறு நடந்தது என்பது தெரியும். முதல் 10 ஓவருக்கு வெறும் 70 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்த நாங்கள் அடுத்த 10 ஓவர்களில் 140 ரன்கள் வரை விட்டுகொடுத்தது தான் மிகப்பெரும் தவறு. கடைசி 5 ஓவருக்கு 85 ரன்கள் தேவை என்ற நிலையில் கூட வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது வெற்றியை பாதித்து விட்டது. வெறும் 6 பந்துகளுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

8 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

8 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

10 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

10 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

11 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

11 hours ago