IPL 2018:அது எப்படி அவ்ளோ ரன் போச்சு!என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியல? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி
ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனில் அதிரடி ஆட்டத்தால் 19 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. பெங்களூருவில் நேற்று மாலை நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
ராயல்ஸ் அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரகானே 36, ஷார்ட் 11 ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை காட்டினார். 10 ஓவரில் 76 ரன் எடுக்கப்பட்டிருந்த நிலையில், பென் ஸ்டோக்சுடன் இணைந்து சாம்சன் அதிரடியாக ஆடினார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்கள் பறக்க, சாம்சன் 34 பந்தில் அரைசதம் விளாசினார்.
ஸ்டோக்ஸ் 27 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த பட்லர் (23 ரன்) நல்ல ஒத்துழைத்து தந்தார். இதனால் கடைசி வரை சாம்சனின் அதிரடி தொடர்ந்ததால் ராயல் அணி கடைசி 10 ஓவரில் 141 ரன்களை விளாசியது. அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. சாம்சன் 10 சிக்சர், 2 பவுண்டரியுடன் 45 பந்தில் 92 ரன்னுடனும், திரிபாதி 5 பந்தில் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி வெற்றிக்காக கடுமையாக போராடியது. டிகாக் 26, மெக்கல்லம் 4 ரன்னில் வெளியேற, கேப்டன் கோஹ்லி 26 பந்தில் அரைசதம் விளாசினார்.
ஆனால், ஸ்ரேயாஷ் கோபால், கோஹ்லி (57 ரன், 30 பந்து), டிவில்லியர்ஸ் (20) இரு முக்கிய விக்கெட்டை வீழ்த்த, ஆர்சிபியின் ரன் வேகம் சரிந்தது. கடைசி கட்டத்தில் மன்தீப் சிங்கும் (47* ரன், 25 பந்து), வாஷிங்டன் சுந்தரரும் (35 ரன், 19 பந்து) அதிரடியாக ஆடி கடுமையாக முயன்றும் வெற்றியை எட்ட முடியவில்லை.
ஆர்சிபி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய கோபால் 4 ஓவரில் 22 ரன் மட்டுமே தந்து 2 விக்கெட் கைப்பற்றினார். 92 ரன் விளாசிய சாம்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.