IPL 2018: நீங்கள் மைதானத்துக்குள் செறுப்பை வீசினாலும்,உங்கள் மீது அதிக அன்பும் ,அக்கறையும் எங்களுக்கு உண்டு ..!ஜடேஜா உருக்கம் …!
சென்னை ரசிகர்கள் மீது எங்களுக்கு அளவு கடந்த அன்பும் அக்கறையும் உள்ளது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரவுண்டர் ஜடேஜா தெரிவித்த்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போட்டி நடைபெற்ற மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டது.
சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை காண வந்த ரசிகர்கள் பல்வேறு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் அமரும் கேலரியில் இருந்து காலணிகள் மற்றும் சட்டை ஆகியவை மைதானத்தின் நடுவே வீசப்பட்டன. கிரிக்கெட் வீரர் ஜடேஜா உள்ளிட்டோர் காலணியை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, காலணி விசியதாக, நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர் டூப்ளசி அந்த காலணியை எடுத்து வந்து ஓரமாக போட்டார்.அதேபோல் ஜடேஜாவோ மற்றொரு காலனியை கால்களால் ஓரமாக தள்ளினார். இந்நிலையில், இது குறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்ட அவர் கூறுகையில்,இன்னும் சென்னை ரசிகர்கள் மீது எங்களுக்கு அளவு கடந்த அன்பும் அக்கறையும் உள்ளது என்று தெரிவித்த்துள்ளார். அதாவது காலணிகளை மைதானத்துக்குள் அவர்கள் மீது எரிந்தும் ரசிகர்கள் மீதான அன்பும்,அக்கறையும் அப்படியே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.