இந்திய அணியின் 4வது இடத்திற்கான புதிரை ஐபிஎல் சொல்லிவிடும்.. கங்குலி
- முதல் இரண்டு போட்டிகளில் வென்ற பிறகு கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான தேடல் ஐபிஎல் தொடரில் நிச்சயம் கிடைக்கும்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-3 என தோற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற பிறகு கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர் அதேபோல பந்துவீச்சாளர்களும் அவ்வபோது அணியை முன்னெடுத்து செல்கின்றனர். ஆனால் இந்த நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஆடும் வீரர்கள் இந்திய அணிக்கு இன்னும் சிறப்பாக அமையவில்லை.
இதுகுறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். “ஐந்தாவது ஆறாவது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் சரியாக ஆடுவர் அதற்கு நான்காவது இடத்தில் இறங்கும் வீரர் உதவ வேண்டும். இப்பொழுது அதற்கான வழியாக வாழ்ந்துள்ளது ஐபிஎல். இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான தேடல் ஐபிஎல் தொடரில் நிச்சயம் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.