கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்துள்ளது.
18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு அடித்து ஆடினார்கள்.அதிரடியாக விளையாடிய வாட்சன் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதன் பின்னர் டு பிளேஸிஸ் 54,ரெய்னா 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் தோனி மற்றும் ராயுடு ஜோடி சேர்ந்து விரட்டலை தொடங்கினர்.இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் அடித்தது.அதிரடியாக விளையாடிய தோனி 23 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.அதேபோல் ராயுடு 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் அஸ்வின் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் பின்னர் 161 ரன்கள் வெற்றி இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…