போராடி வென்ற ரிஷப் பண்ட்! ஆறு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!
டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ராஜஸ்தானின் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீசியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரஹனே, சஞ்சய் சாம்சன் கமிறங்கினர்.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹனே 105* ,ஸ்டீவன் ஸ்மித் 50 ரன்கள் எடுத்தனர்.இறுதியாக 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 6 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் குவித்தனர்.
டெல்லி அணி பந்து விச்சில் ஆக்ஸார் படேல்,இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.கிகிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.192 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
ப்ரித்விஷா, தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்து 42, 54 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயாஷ் 4ரன்னில் அவுட்டாகினார். ரூதர்ஃபோர்டு 11 ரன்களுடன் வெளியேறினர், கூலின் இன்ங்ராம் 3 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆனால் கடைசிவரை களத்தில் நின்று 36 பந்துகளில் 78 ரன்கள் விளாசி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார் டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட்.