நேற்று ரோஹித் தலைமையில் மும்பை அணியும் – தோனி தலைமையில் சென்னை அணியும் இறுதிப் போட்டியில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்து.இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய சென்னை அணியில் களத்தில் தோனியும் , வாட்சனும் விளையாடி கொண்டு இருந்த போது 13 ஓவரை ஹார்திக் பாண்டியா வீசினார் .
அப்போது ஹார்திக் பாண்டியா வீசிய பந்தை வாட்சன் எதிர் கொண்டு அடித்தார். இரு ரன்கள் ஓட முயற்சி செய்தனர்.அப்போது இரண்டாவது ரன் ஓட முயற்சி செய்தபோது தோனியை ரன் அவுட் செய்தனர்.நீண்ட நேரம் கழித்து மூன்றாவது ஆம்பயர் அவுட் என கூறியதால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தோனி ரன் அவுட் ஆனதை தாங்க முடியாத சிறுவன் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் அந்த சிறுவன் “தோனி அவுட்டே இல்லை சும்மா தான் அவுட் குடுக்குறாங்க ,மூணாவது ஆம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் ” என தன் அம்மாவிடம் சொல்லி அழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…