2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.இன்று நடைபெற்ற 53-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் –டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியானது, டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டையும், ட்ரெண்ட் பொல்ட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.ஆரம்ப முதலே டெல்லி அணி அதிரடியாக விளையாடியது.அதிரடியாக விளையாடிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் மட்டும் அடித்தது.டெல்லி அணியில் அதிகபட்சமாக பண்ட் 53 ரன்கள் அடித்தார்.ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் சோதி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றும் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் தான் உள்ளது.சென்னை அணி டெல்லிஅணியை விட ரன்ரேட்டில் அதிகம் உள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…