இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
இன்று 41-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் -சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது.இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் மட்டுமே அடித்தது.சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக பாண்டே 83* ரன்கள் அடித்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் ஹர்பஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
இதில் துவக்கத்திலே டுயு பிளேஸிஸ் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ரெய்னா -வாட்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது.பின் ரெய்னா 38 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.மேலும் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி வெற்றியை நெருங்கியது.
இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 96 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 16 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…