பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.சென்னை வந்துள்ள தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் தற்போது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது.அதனால் சென்னைக்கு விசில் போட, ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமாகி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டோஷூட்களில் நடித்து வருகின்றனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிராவோ, ஹர்பஜன், ஜடேஜா, விஜய் உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி நடனமாடுகின்றனர். ஹர்பஜன் பாங்ரா ஆடியவாரே ஆட்டோவில் இருந்து இறங்குகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கெனவே பெரிதும் எதிர்பார்ப்புகள் நிலவும் நிலையில், அதனை அதிகப்படுத்தும் வகையில் தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை அணி வீரர்களின் புகைப்படங்கள் சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…