இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற 25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் அடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள் அடித்தார்.
இதன் பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.ஆரம்பமே சென்னை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்திருந்தது.தொடக்கத்திலேயே சென்னை அணி விக்கெட்டை இழந்து தடுமாறியது.வாட்ஸன் 0,டு பிளேஸிஸ் 7,ரெய்னா 4,ஜாதவ் 1 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதன் பின்னர் ராயுடு மற்றும் தோனி ஜோடி சேர்ந்தனர்.அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் அடித்தது.ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 2,உனட்கட்,ஆர்ச்சர்,குல்கர்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.
களத்தில் சான்டனர் 10*,ஜடேஜா 9* ரன்களுடன் இருந்தனர்.தோனி 58, ராயுடு 57 ரன்கள் அடித்தனர். இதன் மூலம் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணி வெற்றிபெற்றது.புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது சென்னை.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…