பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்த அஸ்வின்!அஸ்வினை கடுமையாக தாக்கிய ஷேன் வார்னே

Default Image

நேற்றைய போட்டியில் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்ததை    ஷேன் வார்னே கடுமையாக சாடியுள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி: 

நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

 

இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய  பட்லர் விக்கெட்டை அஷ்வின் மன்கட் முறையில் வீழ்த்தியதுதான்.

மன்கட் முறை என்பது என்ன? 

கிரிக்கெட்  விதிமுறையின்படி  மன்கட் முறை என்பது , பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு எதிர்தரப்பில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்துவீசப்படுவதற்குமுன் எல்லைக்கோட்டை விட்டு வெளியே சென்றால் பந்துவீச்சாளரால் அவுட் செய்ய முடியும். கிரிக்கெட் விதிமுறையின்படி  இது அவுட்டாக  எடுத்துகொள்ளப்படும்.  ஆனால் விளையாட்டின் பொதுப் பண்புக்கு ‘மன்கட்’ எதிராகப் பார்க்கப்படுகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 184 ரன்கள் அடித்தது.இந்நிலையில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 என்ற  இலக்கை விரட்டியபோது அந்த துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஆரம்ப முதலே அதிரடியாகத்தான் விளையாடி வந்தார்.ஆனால் 13 ஓவரை பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் வீச வந்தார்.

பட்லரை  மன்கட் முறையில் அவுட் செய்த அஷ்வின்:

அப்போது அஷ்வின்  13 ஓவரின் 5 வது பந்தை வீச முயன்றார் ,அந்த சமயத்தில்  சாம்சன் எதிர் முனையில் பேட்டிங் செய்ய மறுமுனையில் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்களுடன் இருந்தார்,அப்போது அஷ்வின் பந்தை வீசாமல் எல்லைக்கோட்டை விட்டு வெளியே சென்ற பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.ஆனால் பட்லரால் இதை ஜீரணிக்க முடியாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தார்.பின்னர் சிறிது நேரம் அஷ்வின் மற்றும் பட்லர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தோல்வியை நிர்ணயித்த பட்லர் விக்கெட்: 

பின்னர் மூன்றாவது நடுவர் விக்கெட் என்று தெரிவித்ததும்,ஆக்ரோஷமாக சென்றார் பட்லர்.இவரது விக்கெட் ராஜஸ்தான் அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது மட்டும் அல்லாமல் அணி தோல்வி அடையவும் முக்கிய காரணமாகவும் அமைந்தது.

ஆனால் அஷ்வின் மன்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்திய முதலே இந்த விவகாரம் பேசும் பொருளாக அமைந்தது.குறிப்பாக அஷ்வினின் இந்த செயலை மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவும்,எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் சமூக ஊடகங்களிலும் ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

ஷேன் வார்னே கருத்து:

இந்த நிலையில் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரும்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும் உள்ள ஷேன் வார்னே தனது ட்விட்டர் பதிவில் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில் ,அஷ்வின் ஒரு கேப்டனாகவும் தனி நபராகவும் உங்கள் மீது ஏமாற்றம் அடைந்து விட்டேன்.ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை அனைத்து கேப்டன்களும்  ஆட்ட உணர்வுடன் ஆட உறுதி எடுத்துள்ளனர்.ஆனால் அஷ்வின் பந்தை முழுதும் வீசுவதற்கான எந்த நோக்கத்தையும் காட்டவில்லை.இதனால் அந்த பந்தை டெட் பால் என்று தான் அறிவித்திருக்க வேண்டும் என்று பதிவிட்டார். இந்திய கிரிக்கெட் வாரிய கவனத்துக்கு(BCCI)- இப்படி ஆட்டமிழக்கச் செய்தது, ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு அழகு அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

மற்றொரு பதிவில் ,அஷ்வின் இதுபோன்ற இழிவான செயலை ஏன் செய்யவேண்டும்? என்று வசைப்பாடியுள்ளார்.அஸ்வின், இந்தக் கீழ்த்தரமான செயலுக்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்.முதலில் உங்களுக்கு என்ன செய்தாவது வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் மாறவேண்டும்.நேர்மையுடன் விளையாடுவது தான் முக்கியமானது. கிரிக்கெட் விளையாடும் இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு  நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.

மேலும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் விராட் கோலிக்கு இந்த மாதிரி அஷ்வின் செய்தால்,  ஏற்றுக் கொள்வீர்களா? அஸ்வின் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளார். அவர் நேர்மையானவர், மதிப்பானவர் என்று நினைத்தேன்.அஸ்வின் செய்த செயலால்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏராளமான ரசிகர்களை இழந்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை இழந்துவிட்டது.எனவே இதற்கு ஏதாவது  பிசிசிஐ  செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.இவரது பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்