BREAKING NEWS:IPL:சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு..!!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. இன்றைய இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை அணியும் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 26 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். யூசப் பதான் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். 179 என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறக்கவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்