ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ்கான்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பான வழக்கில், பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், தானே நகர போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜரானார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, மகாராஷ்டிராவில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சூதாட்ட கும்பலின் தலைவன் சோனு ஜலான் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
சோனு ஜலான் கைப்பட எழுதிய டைரியையும் பறிமுதல் செய்த போலீசார், அதை ஆய்வுக்குட்படுத்தினர். அதன் அடிப்படையில் நடிகர் சல்மான் கானின் தம்பியும், திரைப்பட நடிகருமான அர்பாஸ் கானுக்கு தானே ((Thane)) போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, இன்று காலை அவர் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தற்போது ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ்கான். மும்பையில் உள்ள தானே போலீஸ் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புகொண்டார்.
இந்நிலையில், சூதாட்ட கும்பல் தலைவனின் டைரியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பலரது பெயரும் இடம்பெற்றுள்ளதாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் பெயரும், சோனு ஜலான் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஐ.பி.எல். சூதாட்டத்தில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருக்கலாம் என்றும், ஆயிரம் கோடி ரூபாய் வரை புழங்கியிருக்கலாம் என்றும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…