அடேங்கப்பா!!முழு பொறுப்பேற்று விளையாடிய பிராவோ-தோனி புகழாரம்!!
ஐ.பி.எல். தொடக்கப் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு வித்திட்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டிவேயின் பிராவோவை கேப்டன் தோனி புகழ்ந்துள்ளார்.
சென்னை அணியின் வெற்றிக்காக பிராவோ முழு பொறுப்பேற்று விளையாடியது அற்புதமானது என மகேந்திரசிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்.
உடை மாற்றும் அறையில் இருந்த போது தோல்வியடைந்து விடுவோம் என்றே நினைத்ததாகவும், ஆனால் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையக் கூடாது என நினைத்ததாகவும் தோனி தெரிவித்தார். அணியின் வெற்றிக்கு முழு பொறுப்பேற்று பிராவோ பேட்டிங் செய்த விதத்தை பார்க்கவே சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறினார்.