3 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்த ஹர்பஜன் சிங்
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
இதில் சென்னை அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு அணி சார்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராத் கோஹ்லி மற்றும் பார்திவ் படேல் இருவரும் திணறலான துவக்கத்தை கொடுத்தனர்.
ஹர்பஜன் சிங் வீசிய 4வது ஓவரில் கோஹ்லி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் மெயின் அலி. அடுத்ததாக டீ வில்லியர்ஸ் என 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், பெங்களூரு அணிக்கு எதிராக 23 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பாக நெஹ்ரா 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போது பெங்களூரு அணி 11 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது.
Most IPL wickets vs RCB:
23 – Nehra
23 – Bhajji*Most wickets in IPL:
154 – Malinga
146 – Mishra
140 – Chawla
137 – Bhajji*
136 – Bravo— Broken Cricket (@BrokenCricket) March 23, 2019