2018 IPL:ஐபிஎல்லில் விராத் கோலி காதலிக்கு பிடித்த அணி எது?அது எப்படி இந்த அணி தான் பிடிக்கும் ..!
ஐபிஎல்லில் பிடித்த அணி இங்கிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வ்யாட் எது என தற்போது தெரிவித்துள்ளார். அவர் தற்போது இங்கிலாந்து மகளிர் அணியுடன் இந்தியாவில் இருக்கிறார்.
முத்தரப்பு தொடரில் விளையாட வந்த இங்கிலாந்து அணி, முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 209 ரன் சேர்த்தது. பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 57 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
இந்த தொடரில் டேனியல் வ்யாட் அற்புதமாக விளையாடினார். சீனியர் வீராங்கனைகள் இல்லாததால், அந்த பொறுப்பை எடுத்து கொண்டு சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசிய வ்யாட், சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டு சதம் அடித்திருக்கிறார்.
இதன் பிறகு இந்திய மகளிர் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது இங்கிலாந்து மகளிர் அணி. இந்த தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 6ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க டேனியல் வ்யாட் தயாரானார். அத்தனை கேள்விகளில், ஒரு ரசிகர் ஐபில்-இல் உங்களுக்கு பிடித்த அணி எது என கேட்டிருந்தார். அதற்கு சற்றும் தாமதிக்காக டேனியல் வ்யாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என கூறினார்.
இந்நிலையில், விராட் கோலியை டேனியல் வ்யாட்டுக்கு பிடித்திருக்கிறது என அனைவரும் பேச தொடங்கினர். முன்னதாக, விராட் கோலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டிருந்தார்.
அதே போல், டேனியல் வ்யாட்டுக்கும் விராட் கோலி பேட்டை பரிசளித்தாக கூறப்படுகிறது. இந்த செய்தி சிறிது நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. இந்திய அணிக்கு எதிராக விராட் கோலி கொடுத்த அந்த பேட்டை வைத்து தான் அவர் சதம் அடித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.