இந்திய அணியில் 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர் ஒருவரின், மேட்ச் பிக்சிங் கும்பல் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போல ஆர்பிஎல் என்பது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் விளையாடும் டி20 கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டிகள் தொடர்பாக மேட்ச் பிக்சிங் புகார்கள் எழுந்து, 6 உள்ளூர் வீரர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ராஜஸ்தான் போலீசாரால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆர்பிஎல் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீரர் டெஸ்ட், 50 ஓவர், 20 ஓவர் ஆகிய 3 போட்டிகளிலும் விளையாடியவர் என்றும், 2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு…
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…