இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோன், ஓலா கால் டாக்ஸி நிறுவனர்களில் ஒருவரான பவிஷ் அகர்வால் உள்ளிட்டோர் உலகின் அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
உலக அளவில் மக்களிடம் செல்வாக்கு உள்ள பிரபலங்கள் குறித்து டைம்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் கருத்து கணிப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க 100 பிரபலங்களின் பட்டியலை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.