வீராட் கோலி உலகின் 100 முக்கியமான நபர்களின் ஒருவர்!எப்படி தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோன், ஓலா கால் டாக்ஸி நிறுவனர்களில் ஒருவரான பவிஷ் அகர்வால் உள்ளிட்டோர் உலகின் அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
உலக அளவில் மக்களிடம் செல்வாக்கு உள்ள பிரபலங்கள் குறித்து டைம்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் கருத்து கணிப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க 100 பிரபலங்களின் பட்டியலை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி, இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோன், ஓலா கால் டாக்ஸி நிறுவனர்களில் ஒருவரான பவிஷ் அகர்வால் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இதுபோலேவே மைக்கேரா சாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளாவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு பட்டியலில் ஹாலிவுட் நடிக்கை நிகோலே ஹிட்மேன், இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் ஹாரி, லண்டன் மேயர் சாதிக் கான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, சவுதி அரசர் முகமது பின் சல்மான், சீன அதிபர் ஜிங் பிங், வட கொரிய அதிபர் கிம்ஜாங், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.