வானவேடிக்கை மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல்!
கடந்த 2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 20 ஓவர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. 51 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்,சன் ரைசர்ஸ் ஐதராபாத் , டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.
சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 2 ஆண்டுகள் தடை முடிந்து இந்த ஆண்டு மீண்டும் களமிறங்குகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைகளுடன் இன்று மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.
இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷண், தமன்னா, வருண்தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்று கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இதனைத்தொடர்ந்து, இரவு 8 மணிக்கு முதல் போட்டி நடைபெறுகிறது. இதில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் THEME SONG நேற்றிரவு வெளியானது. இதனை சமூக வலைதளங்களில் சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.