மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு இடையே கால்பந்து போட்டியில் யார் சிறந்தவர் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியில் அதிகம் கோல் அடிப்பது, விருதுகள் வாங்குவதுடன் அதிக சம்பளம் பெறுவதில் முதல் இடத்திற்கும் போட்டியிட்டு வருகிறார்கள்.
கடந்த சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டா 87.5 மில்லியன் யூரோ சம்பளம் வாங்கி முதல் இடம் பிடித்திருந்தார். மெஸ்சி 76.5 மில்லியன் யூரோ பெற்று 2-வது இடம் பிடித்திருந்தார்.
ஆனால் இந்த சீசனில் சம்பளம், போனஸ் மற்றும் கமர்ஷியல் வருமானம் ஆகியவற்றின் மூலம் மெஸ்சி 126 மில்லியன் யூரோக்கள் (1021.19 கோடி ரூபாய்) பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மைதானத்தில் களம் இறங்கி விளையாடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 25 ஆயிரம் யூரோ (ரூ. 20,26,175) சம்பளமாக பெறுகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 94 மில்லியன் யூரோ (761.84 கோடி ரூபாய்) பெற்று 2-வது இடத்தில் உள்ளார். நெய்மர் 81.5 மில்லியன் யூரோ (660.53 கோடி ரூபாய்) பெற்று 3-வது இடத்தில் உள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் புட்பால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரியல் மாட்ரிட்டின் கரேத் பேலே 44 மில்லியன் யூரோவும், பார்சிலோனாவின் ஜெரார்டு பிக்காய் 29 மில்லியன் யூரோவும் சம்பளமாக பெறுகின்றனர்.பயிற்சியாளர்களில் மான்செஸ்டர் யுனைடெட்டின் ஜோஷ் மவுரினோ முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…