ரொனால்டோவை பின்னுக்கு தள்ளிய மெஸ்ஸி! ஆண்டுக்கு ரூ.1021 கோடி சம்பளம் பெறும் மெஸ்ஸி!ஒரு நிமிடத்திற்கு 20 லட்சம் ரூபாய்!

Default Image

மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு இடையே கால்பந்து போட்டியில் யார் சிறந்தவர் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியில் அதிகம் கோல் அடிப்பது, விருதுகள் வாங்குவதுடன் அதிக சம்பளம் பெறுவதில் முதல் இடத்திற்கும் போட்டியிட்டு வருகிறார்கள்.

கடந்த சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டா 87.5 மில்லியன் யூரோ சம்பளம் வாங்கி முதல் இடம் பிடித்திருந்தார். மெஸ்சி 76.5 மில்லியன் யூரோ பெற்று 2-வது இடம் பிடித்திருந்தார்.

Related image

ஆனால் இந்த சீசனில் சம்பளம், போனஸ் மற்றும் கமர்ஷியல் வருமானம் ஆகியவற்றின் மூலம் மெஸ்சி 126 மில்லியன் யூரோக்கள் (1021.19 கோடி ரூபாய்) பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மைதானத்தில் களம் இறங்கி விளையாடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 25 ஆயிரம் யூரோ (ரூ. 20,26,175) சம்பளமாக பெறுகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ 94 மில்லியன் யூரோ (761.84 கோடி ரூபாய்) பெற்று 2-வது இடத்தில் உள்ளார். நெய்மர் 81.5 மில்லியன் யூரோ (660.53 கோடி ரூபாய்) பெற்று 3-வது இடத்தில் உள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் புட்பால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரியல் மாட்ரிட்டின் கரேத் பேலே 44 மில்லியன் யூரோவும், பார்சிலோனாவின் ஜெரார்டு பிக்காய் 29 மில்லியன் யூரோவும் சம்பளமாக பெறுகின்றனர்.பயிற்சியாளர்களில் மான்செஸ்டர் யுனைடெட்டின் ஜோஷ் மவுரினோ முதல் இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்