நினைவிருக்கிறதா தெ.ஆ. அதிரடி வீரர் ஹெய்ன்ரிச் கிளாசனை?ஸ்மித் இடத்தை பிடிக்கும் கிளாசன்…!

Published by
Venu

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிச் கிளாசன் இடம்பெறுகிறார்.

இந்த கிளாசனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள், தென் ஆப்பிரிக்காவில் இந்தியா சமீபத்தில் வென்று வரலாறு படைத்த ஒருநாள் தொடரில் பிங்க் நிற உடையில் ல் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார் ஹென்றிக் கிளாசன்.

மேலும் அந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாகத் திணறிய இந்திய மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களான யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சு சிக்கன விகிதத்தைக் காலி செய்தவரும் ஹென்றிக் கிளாசன் தான்.

டி20 கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 146 என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அதிர்ஷ்டகரமாக இவரை அடிப்படை விலை ரூ.50 லட்சத்தில் வாங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இன்னொரு பிரச்சினைக்குரிய வீரர் பென் ஸ்டோக்ஸ், இவரது வழக்கு வியாஜ்ஜியங்கள் முடிந்த பிறகே அவர் விளையாட அனுமதிக்கப்படுவாரா என்பது தெரியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:

ரஹானே (கேப்டன்), டிஆர்க்கி ஷார்ட், ராகுல் திரிபாதி, ஆர்யமான் பிர்லா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பிரசாந்த் சோப்ரா, ஹெய்ன்ரிச் கிளாசன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கே.கவுதம், ஜதின் சக்சேனா, மாஹிபால் லோமர், ஸகீர் கான், ஷ்ரேயஸ் கோபால் மிதுன், அன்கிட் சர்மா, அனுரீத் சிங், ஜெய்தெவ் உனாட்கட், தவல் குல்கர்னி, துஷ்மந்த சமீரா, பென் லாஃப்லின்…

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

41 mins ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

1 hour ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

2 hours ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

2 hours ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

2 hours ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

3 hours ago